டெல்லியில் டிராக்டர் பேரணியின்போது காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே வன்முறை வெடித்ததில் பல பொருட்கள் சேதமடைந்துள்ளது.
தலைநகர் டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் பலரும் கடந்த இரண்டு மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் குடியரசு தினமான 26-ஆம் தேதி விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். டெல்லியில் டிராக்டர் பேரணியின்போது காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது.
இந்நிலையில் கோட்டைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அங்குள்ள பல்வேறு பொருட்களை சேதப்படுத்தி உள்ளனர். வரலாற்று நினைவுச்சின்னங்கள் ஈடுசெய்ய முடியாத அளவிற்கு சேதமடைந்துள்ளதாக கலாச்சார அமைச்சர் பிரஹ்லாத் சிங் படேல் அவர்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இரண்டு வரலாற்றுப் பித்தளை அடுப்புகள் காணாமல் போயுள்ளது.
கோட்டையின் பிரதான வாயிலில் சேதமடைந்துள்ளது. இந்த கலைப் பொருட்கள் விலை மதிப்பற்றவை. அவற்றை மாற்ற முடியாது என்றும், நினைவுச்சின்னத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் விரிவான சேதத்தை ஏற்படுத்தியதாகவும், டிக்கெட் கவுண்டர் அழிக்கப்பட்டன, ஜன்னல் பலகைகள் சிதைக்கப்பட்டன, கழிப்பறைகள் உடைக்கப்பட்டன, ஏர் கண்டிஷனர்கள் சேதமடைந்தன, கல் பலகைகள் பிடுங்கப்பட்டன, ஊழியர்கள் அறைகள் அழிக்கப்பட்டன, ரெயில்கள் மற்றும் படிக்கட்டுகள் பழுதடைந்தன, ஒரு போலீஸ் வேன் அடித்து நொறுக்கப்பட்டன, கோட்டைக்குள் நிறுவப்பட்ட சிசிடிவி கேமராக்கள் சேதமடைந்தன என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த சேதங்களை மீட்டெடுக்க பல மாதங்கள் ஆகும். இதுகுறித்து காவல்துறைக்கு ஒரு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…