கொரோனா இரண்டாம் அலை காரணமாக கேரளாவிற்கு செல்ல கூடிய தமிழக மக்களுக்கு இன்று முதல் இ பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியா முழுவதிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு மாநில அரசுகளும் இதனை தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியா முழுவதிலும் தினமும் பல்லாயிரக்கணக்கானோர் தினமும் புதிதாக கொரோனா தொற்றுக்குள்ளாகி வருவதுடன், தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாம் அலைக்கு எதிராக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது போலவே மற்ற மாநிலங்களில் ஊரடங்குகள் கடுமையாக்கப்பட்டு, பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் ஒன்றாக கேரளாவிலும் தற்பொழுது சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளது. மேலும், நேற்று ஒரே நாளில் மட்டும் கேரளாவில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புதிதாக கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். எனவே, இன்று முதல் தமிழகத்திலிருந்து கேரளாவுக்கும் வரும் மக்களுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், இ பாஸ் இன்றி வரும் பயணிகள் எல்லையிலேயே திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…