புதுச்சேரியில் ரேசன் அட்டைகளுக்கு இலவச உணவு பொருட்கள் வழங்கும் திட்டத்திற்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளார்.
புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி அவர்கள் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முதல்வராக ரங்கசாமி அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்ட பின் தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் புதுச்சேரி அமைச்சரவை சார்பில் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் உணவுப் பொருட்கள் இலவசமாக வழங்குதல் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ரேஷன் கடைகளுக்கு பண்டிகை பொருட்கள் இலவசமாக வழங்கும் பல்வேறு திட்டங்கள் குறித்த கோப்புகள் துணைநிலை ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கோப்புகளுக்கு தற்போது புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் ஒப்புதல் வழங்கி உள்ளதாக ஆளுநர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…
டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…