சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி நிர்பயா குற்றவாளிகள் தப்பிக்க நினைத்ததை நாட்டு மக்கள் அனைவரும் பார்த்தோம் என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கடுமையாக விமர்சித்துள்ளார்.
டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றச் சம்பவம் நடைபெற்று 7 வருடங்கள் கழிந்த நிலையில் குற்றவாளிகள் 4 பேருக்கும் இன்று அதிகாலை 5.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இத்தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என தூக்கு மேடைக்கு செல்லும் சில நிமிடத்திற்கு முன்பு வரை கூட சட்ட போராட்டங்களை குற்றவாளிகள் மேற்கொண்டனர். குற்றவாளிகளுள் ஒருவரான பவன் குப்தா சார்பில் இந்த தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து உச்சநீதிமன்றத்தில் நேற்று இரவே மேல்முறையீடு செய்யப்பட்டது.
இம்மனு மீதான விசாரணை இன்று அதிகாலை 2.45 மணிக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பானுமதி, அசோக் பூஷன், போபண்ணா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில் குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் “ஏபி சிங் “ஆஜராகி தனது தரப்பு வாதங்களை முன்வைத்தார்.ஒரே வாதத்தையே அனைத்து நீதிமன்றத்திலும் வைத்த ஏபி சிங்-கின் இந்த வாதத்தினை எதையும் நீதிபதிகள் ஏற்றுக்கொள்ளவில்லை.கூறியதையே திரும்ப திரும்ப கூறாமல் புதியதாக எதையாவது கூறுங்கள் என்று நீதிபகள் கோவத்தோடு கேட்ட நிலையில் குற்றவாளிகள் 4 பேருக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டு விட்டது. மேலும் வழக்கு மிகச்சரியாக நடந்து இருக்கிறது. முறையான பாதையில் வழக்கு சென்று உள்ளது. கருணை மனு அளிக்க 4 வருடங்கள் வரை நேரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே அவர்களுக்கு எதிரான தூக்கு தண்டனையை ரத்து செய்ய முடியாது என்று நீதிபதிகள் குறிப்பிட்ட குறித்தப்படி இன்று அதிகாலை 5.30 மணிக்கு தூக்கு நிறைவேற்றப்பட்டது.
20 நிமிடங்கள் தூக்கில் தொங்கியபடியே இருப்பார்கள் என்று சிறைத்துறை தகவல் தெரிவித்தது.இந்நிலையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில் நிர்பயா வழக்கின் மூலம் சட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி நிர்பயா குற்றவாளிகள் தப்பிக்க நினைத்ததை நாட்டு மக்கள் அனைவரும் பார்த்தோம் என்று கெஜ்ரிவால் கடுமையான விமர்சனத்தையும் தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…