குர்தாஸ்பூர் மாவட்டத்தில் இந்தோ-பாக் எல்லையில் ட்ரோன்மூலம் ஆயுதம் கடத்தல் குறித்து தகவல் கிடைத்த உடனேயே பஞ்சாப் காவல்துறை தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். அப்போது, குர்தாஸ்பூரில் இரவு 11:30 மணியளவில் ஒரு பாக்கிஸ்தான் ட்ரோன் இந்திய எல்லைக்குள் நுழைவதைக் கவனித்தனர். பின்னர், காவல்துறை மற்றும் எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் பாகிஸ்தான் ட்ரோன் மீது தாக்குதல் நடத்தினர்.
ட்ரோனில் இருந்து 11 கைக்குண்டுகளை போலீசார் மீட்டனர் என்று கூறப்படுகிறது. இந்திய எல்லையிலிருந்து 1 கி.மீ தூரத்தில் ட்ரோனில் இருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டன. அனைத்து கையெறி குண்டுகளும் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட கையெறி குண்டு விவகாரத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர், நேற்று காலை இப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது 84 கையெறி குண்டுகள் கொண்ட ஒரு பிளாஸ்டிக் பெட்டியை பஞ்சாப் போலீஸ் கைப்பற்றினர்.
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் , பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
சென்னை : தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் இன்று (மே 3)…
கோவா : ஷிர்கானில் ஆண்டுதோறும் நடைபெறும் தேவி லாராய் ஜாத்ராவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஏழு பேர்…
பெங்களூர் : இந்த சீசனின் 52வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மீண்டும்…
சென்னை : நாய்கள் இனப்பெருக்க கட்டுப்பாடு பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த…
சென்னை : 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர்…