சோனியா காந்தி குறித்து அவதூறாக பேசிய அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராகவும்,ஆதரவாகவும் ட்விட்டரில் ஹேஷ் டேக்குகள் ட்ரெண்டாகி வருகின்றது.
கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பால்கர் என்னுமிடத்தில் இரண்டு சாமியார்கள் உட்பட 3 பேர் மீது திருடர்கள் என்று நினைத்து நடத்திய தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 3 பேரும் உயிரிழந்து விட்டனர்.இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .
இதன் பின்னர் தான் ரிபப்ளிக் சேனலில் இது தொடர்பான விவாதம் ஓன்று நடைபெற்றது.இந்த விவாதம் சர்ச்சைக்கு பெயர்பெற்ற அர்னாப் கோஸ்வாமி தலைமையில் நடைபெற்றது.அப்பொழுது அர்னாப் பேசுகையில்,இந்த விவகாரத்தில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி அமைதியாக இருப்பதாகவும்,அதுவும் இந்துக்களுக்கு நடைபெற்ற சம்பவம் என்பதால் அமைதியாக இருப்பதாகவும்,கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடைபெற்றிருந்தால் அமைதியாக இருந்திருப்பாரா என்று கேள்வி எழுப்பினார்.மேலும் இத்தாலியின் அன்டோனியா மைனோ (சோனியா காந்தி) அப்போது அமைதியாக இருந்திருப்பாரா? என்றும் கேள்வி எழுப்பினார்.இவர் கூறியதுதான் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.மேலும் இவர் மீது இந்தியாவில் பல இடங்களில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் சமூக வலைத்தளமான ட்விட்டரில் அர்னாபிற்கு ஆதரவாக #ISupportArnabGoswami , #WeSupportArnab என்ற இரு ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகின்றது.மேலும் அவருக்கு எதிராக #ArrestAntiIndiaArnab என்ற ஹேஷ் டேக்கும் ட்ரெண்டாகி வருகின்றது.
டெல்லி : இந்தியன் பிரீமியர் லீக் இறுதிப் போட்டி முதலில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனில் நடத்த திட்டமிடப்பட்டது. இந்த…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சாரப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா அவர்கள் இன்று (மே 20,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகதின் தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, சென்னையில் இன்று மதியம்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரா வடதமிழக பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல கீழடுக்கு…
சென்னை : ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ரவியின் விவாகரத்து விவகாரம் ஒவ்வொரு நாளும் மேலும் மேலும்…
சென்னை : மின் கட்டணத்தை 3% உயர்த்த மின் வாரியத்திற்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது என தகவல்…