Mehbooba Mufti [Imagesource : Outlook]
கடந்த 2019ஆம் ஆண்டு ஆளும் பாஜக அரசு ரத்து செய்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது . காஷ்மீர் தனி யூனியன் பிரதேசமாகவும், லடாக் தனி யூனியன் பிரதேசமாகவும் பிரித்து அதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
கடந்த 4 ஆண்டுகளாக காஷ்மீர் மற்றும் லாடாக் யூனியன் பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறாமல் உள்ளது. சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்குகளின் மீதான விசாரணை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன் விசாரணை வந்தது.
காஷ்மீர் – லடாக்.! சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்தது செல்லும்.! உச்சநீதிமன்றம் தீர்ப்பு.!
தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பளித்தனர். அதில் 3 விதமான தீர்ப்புகள் வெளியாகின. 5 நீதிபதிகளில் 3 நீதிபதிகள் சட்ட பிரிவு 370ஐ மத்திய அரசு ரத்து செய்தது செல்லும் என்றபடி தீர்ப்பு வழங்கியதால் அதுவே இறுதி தீர்ப்பாக கருதப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பின் 370வது பிரிவை ரத்து செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முன்னதாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி : மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ் (27) ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில்,…
சென்னை : முன்னாள் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜு, ஜெயலலிதாவின் 1998-ல் பாஜக ஆட்சியைக் கவிழ்க்க எடுத்த முடிவு “வரலாற்றுப்…
கொச்சி : கேரளாவைச் சேர்ந்த பிரபல ராப் பாடகர் வேடன் (எ) ஹிரந்தாஸ் முரளி மீது, இளம்பெண் மருத்துவர் ஒருவர்…
லண்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி இன்று (ஜூலை 31,…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ஆம்…
சென்னை : இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) தலைவர் வி. நாராயணன், நடப்பு நிதியாண்டில் (2025-26) 9 முக்கிய…