விமான நிலையத்தில் நேரடியாக சென்று ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை லவ்லினாவை அசாம் முதல்வர் வரவேற்றுள்ளார்.
டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் குத்துச்சண்டை 69 கிலோ எடைப்பிரிவின் போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா வெண்கலப் பதக்கத்தை வெற்றிகொண்டார். அசாம் மாநிலத்தை சேர்ந்த லவ்லினா போர்கோஹேன் (23) ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு இன்று கவ்காத்தி விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.
இதனை அடுத்து இவரை வரவேற்பதற்காக அசாம் மாநில முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா நேரடியாக விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றுள்ளார். இது குறித்து அசாம் முதல்வர் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ஒலிம்பிக் பதக்கம் வென்றுள்ள நட்சத்திர வீராங்கனை லவ்லினாவை பெருமையுடன் வரவேற்றேன்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் இவர் பதக்கம் வெற்றிகொண்டது மூலமாக பல மக்களது கனவு நிறைவாகியுள்ளது. கிராமப்புறங்களிலிருந்து விளையாட வருபவர்களுக்கு முன்மாதிரியாக இனி இவர் விளங்குவார் என்று தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…