இந்தியாவின் முன்னணி சைக்கிள் நிறுவனங்களில் அட்லஸ் சைக்கிள் நிறுவனம் ஒன்று. இந்த நிறுவனம் சைக்கிள் தயாரிப்பில் 70 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம் டெல்லியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது.
அட்லஸ் சைக்கிள் நிறுவனத்தின் உரிமையாளர் சஞ்சய் கபூர் , மனைவி நடாஷா கபூர், டெல்லியில் இவர்கள் தங்கி உள்ளனர். இந்நிலையில் சஞ்சய் கபூர் வீட்டில் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்த பேனில் நடாஷா கபூர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொண்டபோது வீட்டின் பக்கத்து அறையில் அவரது மகன் மற்றும் மகள் இருந்து உள்ளனர்.
நடாஷா தனது கைப்பட எழுதிய கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர்.அதில் கணவரும் ,தனது பிள்ளைகளும் உடல்நலத்தை பார்த்துக் கொள்ள வேண்டும் என உருக்கமாக எழுதி உள்ளார். ஆனால் தற்கொலை செய்து கொண்டதற்கான அந்த கடிதத்தில் குறிப்பிடவில்லை.
போலீசார் நடாஷா தற்கொலை குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் மனஅழுத்தத்தில் இருந்தாரா..?அல்லது வேறு ஏதாவது காரணமா..?என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் : மாவட்டம் சாத்தூர் அருகே கீழ தாயில்பட்டியில் இயங்கி வரும் ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலையில் ஜூலை 6, 2025…
குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட் அண்ட் பிளிட்ஸ் 2025 போட்டியில், பிளிட்ஸ்…
சென்னை: தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவதற்காக விண்ணப்பங்கள் ஜூலை…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் உத்திகளை வகுக்க, திமுக, அதிமுக,…
நியூயார்க் : உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகியுமான எலான் மஸ்க், ‘தி அமெரிக்க…
திண்டிவனம்: பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவில் இருந்து தலைவர்…