ரேஷன் ஊழல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஷாஜகான் ஷேக் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, ஷாஜஹான் ஷேக்கின் இல்லத்தில் சோதனை நடந்த அமலாக்கத்துறை முடிவு செய்தது. அதன்படி இன்று சோதனை நடந்த ஷாஜஹான் ஷேக் இல்லத்தை நெருங்கியபோது அமலாக்கத்துறை மற்றும் மத்திய பாதுகாப்புப் படைக் குழு மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
200க்கும் மேற்பட்ட உள்ளூர்வாசிகள் அமலாக்க இயக்குனரக அதிகாரிகள் மற்றும் மத்திய ஆயுதமேந்திய துணை ராணுவப் படையினரை சுற்றி வளைத்தனர். அதிகாரிகளை ஷேக்கின் ஆதரவாளர்கள் தாக்கியதால் சோதனை நடத்த முடியவில்லை. இந்த தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த மாநில பாஜக தலைவர் சுகந்தா மஜும்தார், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைந்துள்ளது என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது என்று அவர் கூறினார்.
உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி வழக்கு இன்று விசாரணை..!
கொரோனா காலத்தில், மாநிலத்தில் ரேஷன் விநியோகத்தில் பெரும் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. கடந்த ஆண்டு, ரேஷன் விநியோகத்தில் ஊழல் செய்ததாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஜோதிபிரியோ மல்லிக்கை ஊழல் தடுப்பு அமைப்பு கைது செய்தது. இதையடுத்து மல்லிக்கின் கூட்டாளிகளிடமும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. மேலும் அவரது தனிப்பட்ட உதவியாளர் அமித் தே மற்றும் அவரது நெருங்கிய உதவியாளர் அபிஜித் தாஸ் ஆகியோர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…