பகுஜன் சமாஜ் கட்சி எம்பி டேனிஷ் அலி சஸ்பெண்ட்!

Published by
பாலா கலியமூர்த்தி

பகுஜன் சமாஜ் கட்சியின் (பிஎஸ்பி) நாடாளுமன்ற உறுப்பினர் டேனிஷ் அலி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைமை அறிவித்துள்ளது. கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) அதன் எம்பி டேனிஷ் அலியை சஸ்பெண்ட் செய்தது அக்கட்சி தலைவர் மாயாவதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

அண்மையில் டேனிஷ் அலியை நாடாளுமன்றத்தில் பாஜக உறுப்பினர் அவதூறாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுமட்டுமில்லாமல், நேற்று பதவி பறிக்கப்பட்ட மகுவா மொய்த்ராவுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த எம்பி டேனிஷ் அலி பங்கேற்றிருந்தார்.

இந்த நிலையில், எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற மறுநாளே பகுஜன் சமாஜ் கட்சியில் தற்காலிகமாக நீக்கி அக்கட்சி தலைவர் மாயாவதி நடவடிக்கை எடுத்துள்ளார்.  கட்சியின் கொள்கைகள், சித்தாந்தம் மற்றும் ஒழுக்கத்திற்கு எதிரான அறிக்கைகள் அல்லது செயல்களுக்கு எதிராக நீங்கள் எச்சரிக்கப்பட்டீர்கள்.

அமைச்சர்களுக்கு இலாகாக்களை ஒதுக்கீடு செய்தார் தெலுங்கானா முதலமைச்சர்!

ஆனால், அதையும் மீறி நீங்கள் தொடர்ந்து கட்சிக்கு எதிராக செயல்பட்டு வருகிறீர்கள் என்று பகுஜன் சமாஜ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. 2019 லோக்சபா தேர்தலில், டேனிஷ் அலி தனது சொந்த ஊரான ஹபூரை விட்டு உ.பி.யில் உள்ள அம்ரோஹாவில் இருந்து பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட்டார்.

இது அவரது முதல் தேர்தல் போட்டியாக இருந்தபோதிலும், அலி முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்தும் தொகுதியான அம்ரோஹாவில் இருந்து பெரிய அளவில் வெற்றி பெற்றார். தற்போதைய பாஜக எம்பி குன்வர் சிங் தன்வாரை 63,000 க்கும் அதிகமான வித்தியாசத்தில் தோற்கடித்தார். இருப்பினும், அம்மாநிலத்தில் பாஜக மகத்தான வெற்றி பெற்றது.

இந்த சூழலில், நாடாளுமன்றத்தில் தொடர்ந்து பாஜகவை கடுமையாக எதிர்த்து வந்தவர் டேனிஷ் அலி. சமீபத்தில் பாஜக உறுப்பினர் ரமேஷ் பிதுரி இவரை நாடாளுமன்றத்திலேயே தீவிரவாதி என கொச்சைப்படுத்தி இருந்தார். இந்த நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியில் (பிஎஸ்பி) இருந்து டேனிஷ் அலி எம்பி தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டார்.

Recent Posts

சாலை விபத்தில் காயம் ஏற்பட்டால் இலவச சிகிச்சை! மத்திய அரசு அறிவிப்பு!

டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…

26 minutes ago

பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை! 3 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண்!

மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…

1 hour ago

சந்தர்ப்பவாதிகளாலும், துரோகிகளாலும் திமுகவை வீழ்த்த முடியாது! மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…

2 hours ago

பாகிஸ்தானுக்கு சிந்து நதி தண்ணீர் நிறுத்தம்? புதிதாக 6 அணைகள் கட்ட அரசு திட்டம்!

டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…

3 hours ago

Live : சென்னை ED ரெய்டு முதல்.. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரை…

சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு,  தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…

5 hours ago

வான்வெளி தாக்குதல்., சைரன் ஒலி., பதுங்கு குழிகள்! நாளை நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…

5 hours ago