காசியாபாத் பகுதியில் வீட்டின் பால்கனி இடிந்து விழுந்த விபத்தில் 8 மாத குழந்தை உயிரிழந்துள்ளது.
உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள காசியாபாத் கோடா மகாலட்சுமி காலனியில் வசித்து வரக்கூடிய பெண் ஒருவர் தனது சகோதரர் வீட்டிற்கு ரக்ஷாபந்தன் கொண்டாடுவதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் மழை பெய்ததால் அந்த பெண் தனது 8 மாத குழந்தை மற்றும் அவரது தாயாருடன் பால்கனியின் கீழ் நின்றுகொண்டிருந்துள்ளார். அப்பொழுது இந்த பால்கனி திடீரென இடிந்து விழுந்துள்ளது.
இந்த விபத்தில் 8 மாத குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது. இதனையடுத்து அந்த பெண் மற்றும் அவரது தாயார் பலத்த காயம் அடைந்த நிலையில், உடனடியாக அருகில் இருந்தவர்கள் காயமடைந்த பெண்களை டெல்லியில் உள்ள லால்பகதூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் உடல் நிலை மோசமானதால் வேறு ஒரு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். பால்கனி இடிந்து விழுந்து 8 மாத குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…