பிரதமர் மோடி நேற்று காணொளி காட்சி மூலம் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நாட்டு மக்களுக்கு ஒரு வீடியோ செய்தி வெளியிட்டார். அதில் ஊரடங்கை கடைபிடிப்பதில் நாம் உலகளவில் முன்னுதாரணமாக இருந்து வருகிறோம். அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறீர்கள். நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவுக்கு யுத்தம் நடத்தியதற்கு நன்றி என பிரதமர் மோடி கூறினார்.
இதையெடுத்து வரும் ஏப்ரல் 5-ம் தேதி நாளை இரவு 9 மணி முதல் 9 நிமிடங்கள் வீட்டின் மின்விளக்கை அணைத்துவிட்டு, மெழுவர்த்தி, டார்ச் மற்றும் அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும் என தெரிவித்தார். இந்த நிலையில் நாளை மெழுகுவர்த்தி, அகல்விளக்கை ஏற்றுவதற்கு முன் ஆல்கஹால் கலந்த சானிடைசர் பயன்படுத்த வேண்டாம் என்றும் அதற்கு பதில் கைகளை சோப்பு போட்டு மட்டும் கழுவி விட்டு, பின்னர் விளக்கேற்றும்படி இந்திய ராணுவம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் பொதுமக்கள் அலட்சியத்தை குறைத்து சற்று விழிப்புடன் இருக்குமாறு வலியுறுத்தியுள்ளது.
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் தனது 23-வது படமாக "மதராஸி" படத்தில் நடித்துள்ளார். பிரபல இயக்குநர் முருகதாஸ் இப்படத்தை இயக்கியுள்ளார்,…
டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், 'தாக்குவது என்று முடிவெடுத்துவிட்டால், ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும்.…
ஆந்திரா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) மற்றும் நாசா (NASA) இணைந்து உருவாக்கிய நிசார் (NISAR)…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் போரை தன்னுடைய முயற்சியில் நிறுத்தியதாக டிரம்ப் கூறி வரும் நிலையில், மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின்…
டெல்லி : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் காரசாரமான விவாதங்களுடன் நடந்துவருகிறது. இன்று ஆபரேஷன் சிந்தூர் பற்றிய எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு அரசு…
சென்னை : இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களைளையும், அவர்களது…