பீகார் பாலம் பாஜகவால் இடிக்கப்பட்டது – அமைச்சர் பகீர் குற்றசாட்டு

கங்கை நதி மீது கட்டப்பட்டு வந்த பாலத்தை தகர்த்தது பாஜகதான் என பீகார் அமைச்சர் தேஜ் பிரதாப் யாதவ் குற்றசாட்டு.
பீகார் மாநிலம் பாகல்பூரில் கங்கை ஆற்றின் மீது கட்டப்பட்டு வந்த பாலம் திடீரென இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ரூ.1750 கோடி மதிப்பில் பாலம் கட்டப்பட்டு வந்த நிலையில், 2வது முறையாக, இந்த பாலம் இடிந்து விழுந்துள்ளது..
அம்மாநில முதல்வர் கங்கை ஆற்றில் கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்த தொடர்பாக துரை ரீதியான ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் அவர் கூறுகையில், கங்கை ஆற்றில் கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்தவிவகாரத்தில், பாலம் விபத்துக்கு காரணமானவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கங்கை நதி மீது கட்டப்பட்டு வந்த பாலத்தை தகர்த்தது பாஜகதான்; நாங்கள் பாலத்தை கட்டுகிறோம்; அதை அவர்கள் தகர்க்கின்றனர் என பீகார் அமைச்சர் தேஜ் பிரதாப் யாதவ் என குற்றம்சாட்டியுள்ளார்.