பீகாரில் வசிக்கும் பெண் ஒருவர்,பிரசாந்த் சதுர்வேதி என்ற பூசாரி தனது கனவில் வந்து தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக போலீசாரிடம் புகார் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியளித்துள்ளது.
பீகார் அவுரங்காபாத் மாவட்டத்தில் வசிக்கும் ஒரு பெண்,தனது மகன் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால்,கடந்த ஜனவரியில் பூசாரி பிரசாந்த் சதுர்வேதியை அணுகியிருந்தார்.
அப்போது,அந்த சதுர்வேதி அந்த பெண்ணின் மகனுடைய உடல்நிலையை சரிசெய்வதற்காக ஒரு மந்திரத்தை கொடுத்து,சில சடங்கு முறையையும் செய்ய சொன்னார்.ஆனால்,அந்த பெண்ணின் மகன் 15 நாட்களுக்குப் பிறகு இறந்தார்.
இந்நிலையில்,தனது மகன் இறந்த பிறகு,சதுர்வேதி வசிக்கும் காளி கோயிலுக்குச் சென்று,தனது மகன் எப்படி இறந்தார் என்பதை தெளிவுபடுத்தும்படி கேட்டார்.ஆனால்,சதுர்வேதி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும்,ஆனால்,இறந்த தனது மகன் தன்னை காப்பாற்றியதாகவும் அந்த பெண் உள்ளூர் போலீசாரிடம் தெரிவித்தார்.
மேலும்,சதுர்வேதி தொடர்ந்து தனது கனவில் வருவதாகவும்,பலமுறை தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அந்த பெண் ஒரு அதிர்ச்சியான குற்றச்சாட்டை கூறினார்.
இதுகுறித்து,உள்ளூர் போலீசார் ஒருவர் கூறுகையில்:”சதுர்வேதிக்கு எதிராக எங்களுக்கு எழுத்துப்பூர்வமாக புகார் வந்ததால், நாங்கள் அவரிடம் விசாரித்தோம்.
ஆனால்,அந்த பெண் யாரென்று தனக்கு தெரியவில்லை என்று சதுர்வேதி மறுத்தார்,மேலும்,அந்த பெண் தன்னை ஒருபோதும் சந்தித்ததில்லை என்றும் கூறினார்.எனவே,சதுர்வேதிக்கு எதிராக எங்களிடம் எந்த ஆதாரமும் இல்லை என்பதால், ஒரு பத்திரத்தை தாக்கல் செய்த பின்னர் அவரை விடுவித்தோம்”,என்று கூறினார்.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…