இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்தநாள்! நினைவிடத்தில் ராகுல்காந்தி மரியாதை!

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்தநாள். தலைவர்கள் மரியாதை.
இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து, டெல்லியில் உள்ள நேருவின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அவரது நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.
மேலும், பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்வீட்டர் பதிவில், ‘நாட்டின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளில்,அவருக்கு மரியாதை செலுத்துகிறேன் என பதிவிட்டுள்ளார். மேலும், பல தலைவர்கள் ட்வீட்டர் வாயிலாக அவருக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர். மேலும், நேருவின் பிறந்தநாள் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025