பீகார் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜகவின் பொறுப்பாளராக மகாராஷ்டிர மாநில முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பீகாரில் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தள ஆட்சி வருகின்ற நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது.எனவே 243 தொகுதிகளை அடங்கிய பீகாரில் ,பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் 3 கட்டமாக நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்தது. முதல் கட்டமாக 71 தொகுதிகளுக்கு அக்டோபர் 28-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. 2வது கட்டமாக 94 தொகுதிகளுக்கு நவம்பர் 3 -ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. 3வது கட்டமாக 78 தொகுதிகளுக்கு நவம்பர் 7-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் 10-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும் பீகார் சட்டமன்றத் தேர்தலில் வாக்குப் பதிவிற்கான நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.காலை 7 மணியில் இருந்து மாலை 6 மணி வரை வாக்குபதிவு நடைபெறுகிறது. வாக்குப் பதிவின் கடைசி ஒரு மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்யலாம். அரசியல் கட்சியினர் வாக்கு சேகரிக்க செல்லும்போது 5 நபர்கள் மட்டுமே செல்ல வேண்டும். பீகார் சட்டப்பேரவை தேர்தலில் ஆன்லைன் மூலம் வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.குறிப்பாக பீகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைமுறைகள் செயல்பாட்டுக்கு வந்தது .எனவே அங்குள்ள கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான பணிகளை தொடங்கியுள்ளது.
இந்நிலையில் பீகார் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜகவின் பொறுப்பாளராக மகாராஷ்டிர மாநில முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…