திரிணாமுல் காங்கிரசில் இணைந்த பாஜக எம்எல்ஏ தன்மோய் கோஷ்.
பிஷ்ணுபூர் எம்எல்ஏ தன்மோய் கோஷ் அவர்கள், பாஜக-வில் இருந்து விலகி, அமைச்சர் பிராத்தியா பாசு முன்னிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். இவர் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பதாக தான் திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி, மார்ச் மாதத்தில் பாஜகவில் இணைந்தார். இவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்த போது, பங்கூரா மாவட்டத்தின் பிஷ்ணுபூர் நகரத்தின் டிஎம்சி இளைஞர் தலைவராகவும், உள்ளூர் குடிமை அமைப்பின் கவுன்சிலராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுக்குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கோஷ், ‘மேற்கு வங்க மக்களிடையே பாஜக குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது. எனவேதான் நான் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தேன். மேற்கு வங்கத்தின் நலனுக்காக அனைவரும் திரிணாமுல் காங்கிரசில் இணைய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நாம் முதல்வர் மம்தா பானர்ஜியின் கைகளை வலுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்றும், பழிவாங்கும் அரசியலை செய்து பாஜக மாநில மக்களிடையே குழப்பத்தை உருவாக்க முயற்சிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…