டெல்லி மாநகராட்சி இடைத்தேர்தலில் பாஜக படுதோல்வியை தழுவியுள்ளது.
டெல்லி மாநகராட்சியில் உள்ள செளகான் பங்கர், ரோகினி, ஷாலிமர்பாக் , திரிலோக்புரி மற்றும் கல்யாணபுரி ஆகிய 5 வார்டுகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. தற்போது முடிவுகள் வெளியாகியுள்ளது.
அதில், 4 இடங்களில் ஆம்ஆத்மி கட்சியும், ஒரு இடத்தில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றது. ஆனால், பாஜகவால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. இந்த 5 இடங்களில் செளகான் பங்கர் வார்டில் அதிக வாக்குகளை பெற்று காங்கிரஸ் கட்சி வெற்றியை வசமாக்கியது. மீதமுள்ள ரோகினி, ஷாலிமர்பாக் ,திரிலோக்புரி, கல்யாணபுரி ஆகிய வார்டில் ஆம்ஆத்மி வெற்றியை பதிவு செய்தது.
பல மாநிலங்களில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் தொடர்ந்து வெற்றியை பதிவு செய்துவந்த பாஜகவிற்கு டெல்லி மாநகராட்சி இடைத்தேர்தலில் படுதோல்வியை தழுவியுள்ளது.
சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இரு நாட்டு…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…