கர்நாடக அரசியலில் நாளுக்கு நாள் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகிறது.குமாரசாமி அரசுக்கு அளித்த ஆதரவை திரும்ப பெறுவதாக சில எம்எல்ஏக்கள் தெரிவித்து தங்களது பதவியை ராஜினாமா செய்தார்கள். இதனையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி அடைந்தது.இதனால் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு எடியூரப்பா தலைமையிலான பாஜகவிற்கு கிடைத்தது.பின்னர் ஆளுநர் எடியூரப்பாவை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார்.
இதனால் நான்காவது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்றார்.பதவி ஏற்புக்கு பின் தனது அரசின் பெரும்பான்மையை நிரூபிப்பதாக தெரிவித்தார். பின்னர் நடைபெற்ற பேரவையில் எடியூரப்பா தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றது.நடைபெற்ற குரல் வாக்கெடுப்பில் 105 பாஜக எம்.எல்.ஏக்கள் மற்றும் 1 சுயேட்சை எம்.எல்.ஏ எடியூரப்பா அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்த நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு வெற்றிபெற்ற நிலையில் சபாநாயகர் ரமேஷ்குமார் பதவியில் இருந்து விலகினார்.திடீரென ராஜினாமா கடிதத்தை துணை சபாநாயகரிடம் கொடுத்து விட்டு இருக்கையிலிருந்து சென்று விட்டார் ரமேஷ் குமார்.
இந்நிலையில் பாஜக எம்எல்ஏ விஸ்வேஷ்வர் ஹெக்டே சபாநாயகர் தேர்தலில் போட்டியிட முதல்வர் எடியூரப்பாவுடன் சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…