அருணாச்சலப் பிரதேசத்தில் நிதிஷ்குமாரின் கட்சிக்கு 7 எம்.எல்.ஏ.க்கள் இருக்கும் நிலையில், அதில் 6 பேர் பாஜகவுக்கு தாவியுள்ளனர்.
அருணாச்சல பிரதேசத்தின் 60 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் ,ஐக்கிய ஜனதாதளம் இப்போது ஒரு எம்.எல்.ஏ.வை மட்டுமே கொண்டுள்ளது.அதாவது அருணாச்சல பிரதேசத்தில் ஐக்கிய ஜனதாதள கட்சியின் தலைவர் நிதீஷ் குமாருக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் கட்சியின் ஏழு எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் பாஜகவிற்கு சேர்ந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆகவே தற்போது பாஜகவில் 48 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.காங்கிரஸ் மற்றும் தேசிய மக்கள் கட்சி தலா நான்கு உறுப்பினர்களைக் கொண்டுள்ளன.ஹெயெங் மங்ஃபி, ஜிகே டகோ, டோங்ரு சியோங்ஜு, டேலம் தபோ, காங்காங் டாகு மற்றும் டோர்ஜி வாங்டி கர்மா ஆகிய 6 ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் விலகியுள்ளனர் . அவர்களில் மூன்று பேர் இடைநீக்கம் செய்யப்பட்டு நவம்பர் 26-ஆம் தேதி அன்று “கட்சி விரோத நடவடிக்கைகள்” காரணமாக நோட்டீஸ் அனுப்பப்பட்டனர்.
“கட்சியில் சேருவதற்கான நோக்கத்தை தெரிவிக்கும் அவர்களின் கடிதங்களை நாங்கள் ஏற்றுக்கொண்டோம்” என்று பாஜகவின் அருணாச்சல பிரதேச தலைவர் பி.ஆர் வாகே கூறியுள்ளார். பாஜகவும், ஜனதா தளமும் சமீபத்தில் பீகார் சட்டமன்றத் தேர்தலில் நவம்பர் மாதம் ஒன்றாக போட்டியிட்டு வெற்றி பெற்றன.இந்த வெற்றியால் நிதிஷ் குமார் தனது நான்காவது முறையாக முதல்வராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…