தவறு செய்தால் இனி வீடியோ ஆதாரம் இருக்கு.! மும்பை ரயில்வே துறையின் சூப்பர் ஐடியா.!

மும்பை ரயில் டிக்கெட் பரிசோதகர்களுக்கு பாடி கேமிரா மற்றும் QR கோடு பணபரிமாற்ற வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
ரயிலில் சில சமயம் நடக்கும் வன்முறை சம்பவங்களை தடுக்கவும், டிக்கெட் எடுக்காதவர்கள், விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கவும், மத்திய ரயில்வேயின் மும்பை கோட்டம் புதிய நடவடிக்கை மேற்கொண்டது.
அதில், மும்பை கோட்டத்தில் டிக்கெட் பரிசோதகர்களுக்கு பாடி கேமராக்கள் மற்றும் அபராதம் வசூலிக்க QR கோடு ஆகியவை அளிக்கப்பட உள்ளன. இதற்காக, மத்திய ரயில்வே, ஒரு கேமிரா 9000 ரூபாய் வீதம் 50 பாடி கேமிராக்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த வசதிகள் மூலம், ரயிலில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றால் அதனை வீடியோ ஆதாரத்துடன் பதிவு செய்து விசாரணைக்கு உட்படுத்தவும், அபராதம் விதிக்கும் போது அது வெளிப்படை தன்மையுடனும், எளிதாகவும் இருப்பதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.