குல்காம் மாவட்டத்தில் காணாமல் போன ராணுவ வீரர் ஷாகிர் மஞ்சூரின் சடலம் நேற்று மீட்கப்பட்டது என கூறப்படுகிறது.
தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் காணாமல் போன ராணுவ வீரர் ஷாகிர் மஞ்சூரின் சடலம் நேற்று மீட்கப்பட்டது என கூறப்படுகிறது. காணாமல் போன இராணுவ வீரரின் குடும்பம் ஷாகிரின் உடல் என்பதை உறுதிப்படுத்தினர். ஷாகீரின் உடலா..? என்பதை அறிய டிஎன்ஏ பரிசோதனை செய்ய போலீசார் அனுப்பியுள்ளனர்.
குல்காமில் உள்ள முகமது போரா கிராம மக்கள் காலையில் கிராமத்தில் உள்ள பிஎஸ்என்எல் கோபுரத்தின் அருகே சிதைந்த உடலை பார்த்துள்ளனர். அப்பகுதியினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று உடலை எடுத்துச் சென்றனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தெற்கு காஷ்மீர் மாவட்டம் ஷோபியான் பகுதியில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இராணுவ வீரர் ஷாகிர் மஞ்சூர் உடல் என்று சந்தேகிக்கப்படுகிறது.
அது அவருடைய உடல் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்று காணாமல் போன வீரரின் தந்தை மஞ்சூர் வாகே கூறுகிறார். டிஎன்ஏ பரிசோதனைக்காக எலும்புக்கூடு ஸ்ரீநகருக்கு கொண்டு செல்லப்பட்டது. டிஎன்ஏ மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு அது பொருந்தினால், உடல் ஷாகீரின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என கூறப்படுகிறது.
ஜம்மு -காஷ்மீர் லைட் காலாட்படையுடன் இணைக்கப்பட்ட இராணுவத்தின் 162 பட்டாலியனுடன் பணியாற்றிய ஷாகிர், வீட்டிலிருந்து பீஹி பாகில் உள்ள இராணுவ முகாமுக்கு சென்று கொண்டிருந்தபோது தீவிரவாதிகள் அவரை அருகிலுள்ள ஆப்பிள் தோட்டத்தில் இருந்து ஆகஸ்ட் 2, 2020 அன்று கடத்திச் சென்றனர். அடுத்த நாள், அவரது கார் எரிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், அவரது இரத்தம் தோய்ந்த ஆடைகள் மீட்கப்பட்டன என்று ஒரு இராணுவ அதிகாரி கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…