கொரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமாறு உச்சநீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை காரணமாக, பாதிப்பு எண்ணிக்கை தினந்தோறும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. நோயாளிகள் அதிகரிப்பால், பல பகுதிகளில் ஆக்சிஜன், தடுப்பூசி, படுக்கைகள் கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு, வெளிநாடுகளில் இருந்து மருத்துவ சார்ந்த பொருட்களை இறக்குமதி செய்துகொண்டியிருக்கிறது.
இந்த சூழலில் 18 முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் நாளை முதல் தொடங்குகிறது. ஆனால், கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையால் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் 18 வயதானவர்களுக்கான தடுப்பூசி போடும் திட்டம் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், கொரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமாறு உச்சநீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது. தடுப்பூசி உற்பத்தியில் மத்திய அரசு தலையிட்டு உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளது. மேலும், மாநிலங்களே தடுப்பூசியை கொள்முதல் செய்யும்போது, சமமாக கிடைப்பது எப்படி உறுதி செய்யப்படும் என கேள்வி எழுப்பப்பட்டது என்பது குறிப்பிடப்படுகிறது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…