#Breaking:லக்கிம்பூர் விவகாரம்:.5,000 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்…முக்கிய குற்றவாளி யார்?..!

Published by
Edison

உத்தரப் பிரதேசம்:லக்கிம்பூர் வன்முறையில் விவசாயிகள் கொல்லப்பட்டது தொடர்பாக நீதிமன்றத்தில் 5,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை உ.பி.காவல்துறை தாக்கல் செய்துள்ளது. அதில், மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆசிஷ் மிஸ்ரா பெயர் முக்கிய குற்றவாளியாக இடம் பெற்றுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெர்ரி பகுதியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாயிகள் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.அதன்பின்னர்,நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் என மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து,மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகனான ஆஷிஷ் மிஸ்ரா சென்ற கார் மோதியதன் காரணமாகவே விவசாயிகள் உயிரிழந்தனர் என்ற குற்றம் சாட்டப்பட்டது.இது தொடர்பாக, வழக்கும் தொடுக்கப்பட்டது.மேலும்,காவலர்களும் விசாரணையை தீவிரப்படுத்தியிருந்தனர்.

இதனைத்தொடர்ந்து,இந்த வழக்கில் ஆஷிஷ் மிஸ்ரா உள்ளிட்ட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.அதன்பின்னர்,இந்த விவகாரத்தில் நடைபெறும் விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற நீதிபதி ராஜேஷ்குமார் ஜெயின் என்பவரை உச்சநீதிமன்றம் நியமித்தது.மேலும் 3 மூத்த போலீஸ் அதிகாரிகளையும் சிறப்பு புலனாய்வு குழுவுடன் சேர்த்தது.

இதனையடுத்து,லக்கிம்பூர் கெர்ரி விவசாயிகளின் ஆர்ப்பாட்டத்தில் கார் நுழைந்தது மற்றும் வன்முறை சம்பவம் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதி என்றும்,மாறாக எதார்த்தமாக நடந்தவை அல்ல என்றும் இதனை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு தெரிவித்தது.மேலும்,மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் உட்பட கைது செய்யப்பட்ட 13 குற்றவாளிகள் மீது கொலை முயற்சி குற்றம் சாட்டப்பட வேண்டும் என்றும் இக்குழு உச்சநீதிமன்றத்திற்கு பரிந்துரைத்தது.

இந்நிலையில்,லக்கிம்பூர் வன்முறையில் விவசாயிகள் கொல்லப்பட்டது தொடர்பாக உ.பி. மாவட்ட கீழமை நீதிமன்றத்தில் 5,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை காவல்துறை தாக்கல் செய்துள்ளது.அதில், விவசாயிகள் மீது காரை ஏற்றிய சம்பவ இடத்தில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆசிஷ் மிஸ்ரா இருந்துள்ளார் என்று கூறி அவரது பெயர் முக்கிய குற்றவாளியாக இடம் பெற்றுள்ளது.

Recent Posts

கடைசி நேரத்தில் சொதப்பிய ஹைதராபாத்! குஜராத் த்ரில் வெற்றி!

கடைசி நேரத்தில் சொதப்பிய ஹைதராபாத்! குஜராத் த்ரில் வெற்றி!

அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…

1 hour ago

GTvsSRH : சுழற்றிப்போட்ட சுப்மன் – பட்லர் புயல்…அதிரடி ஹைதராபாத்துக்கே இந்த அடியா?

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…

3 hours ago

“ஜிஎஸ்டியால் வரிச்சுமை குறைந்துள்ளது!” நிர்மலா சீதாராமன் பேச்சு!

சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…

6 hours ago

ஈரோடு இரட்டை கொலை., என்ன நடவடிக்கை எடுத்துள்ளோம்? அமைச்சர் முத்துசாமி பேட்டி!

ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…

7 hours ago

தவெக – பாஜக கூட்டணியா? நயினார் நாகேந்திரன் பதில்!

நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…

7 hours ago

ரூ.21,000 கோடி சம்பாதித்த இந்திய யூடியூபர்கள்! யூடியூப் CEO தகவல்!

மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…

10 hours ago