டெல்லி:நாட்டின் 73-வது குடியரசு தினத்தையொட்டி,21 குண்டுகள் முழங்க குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் தேசியக் கொடியேற்றியுள்ளார்.
நாட்டின் 73-வது குடியரசு தினத்தையொட்டி,டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் தேசியக் கொடியேற்றியுள்ளார்.அப்போது,21 துப்பாக்கி குண்டுகள் முழங்கப்பட்டது.தேசிய கீதம் இசைக்கக்கப்பட்டது.இதனையடுத்து, வீரதீர செயல்புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கி குடியரசு தலைவர் கௌரவப்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து,முப்படைகளின் அணிவகுப்பு டெல்லி ராஜபாதையில் தொடங்கி இந்தியா கேட் வரை நடைபெற்று வருகிறது.குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் முப்படை அணிவகுப்பு மரியாதையை ஏற்று வருகிறார்.இந்த அணிவகுப்பில்,1965,1971 ஆண்டின்போது போர்களில் பயன்படுத்தப்பட்ட பீரங்கிகள்,தபோதைய நவீன ஆயுதங்கள் இடம் பெற்றுள்ளன.குறிப்பாக,சென்னை ஆவடியில் தயாரான அர்ஜூன் ரக பீரங்கியும் டெல்லி குடியரசு தனவிழா அணிவகுப்பில் கலந்து கொண்டுள்ளது.
டெல்லியில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் பிரதமர் மோடி,மத்திய அமைச்சர்கள்,மற்றும் முப்படைத் தளபதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.மேலும்,கொரோனா பரவல் காரணமாக வெளிநாட்டு தலைவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்பது ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கோவா : ஷிர்கானில் ஆண்டுதோறும் நடைபெறும் தேவி லாராய் ஜாத்ராவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஏழு பேர்…
பெங்களூர் : இந்த சீசனின் 52வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மீண்டும்…
சென்னை : நாய்கள் இனப்பெருக்க கட்டுப்பாடு பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த…
சென்னை : 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர்…
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…