உச்சநீதிமன்றம் ராஜஸ்தான் சபாநாயகர் கோரிக்கை நிராகரித்தது.
ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெஹ்லோட் மற்றும் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் டெல்லியில் முகாமிட்டுள்ளார். இதையெடுத்து, இரண்டு முறை சட்டமன்றக் கட்சி கூட்டத்தில் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்ளவில்லை.
இதனால், மாநில சட்டசபை சபாநாயகர் சி.பி. ஜோஷி கடந்த ஜூலை 14- ம் தேதி தகுதிநீக்க நோட்டீஸை சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு அனுப்பினார். பின்னர், சபாநாயகர் நோட்டீஸை ரத்து செய்ய கோரி சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தை அணுகினர்.
இந்த வழக்கு மனு மீதான விசாரணை நேற்று முன்தினம் மீண்டும் வந்தது. அப்போது, சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் மீது வருகின்ற ஜூலை 24-ஆம் தேதி வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதைத்தொடர்ந்து, ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ராஜஸ்தான் சட்டமன்ற சபாநாயகர் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்நிலையில், சபாநாயகர் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜஸ்தான் உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக்கோரிய சபாநாயகரின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம். மேலும், சச்சின் பைலட் உள்ளிட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்கில் வரும் 24-ஆம் தேதி ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் திட்டமிட்டபடி உத்தரவுகளை பிறப்பிக்கலாம் என உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…
விருதுநகர் : மாவட்டம் சாத்தூர் அருகே கீழ தாயில்பட்டியில் இயங்கி வரும் ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலையில் ஜூலை 6, 2025…
குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட் அண்ட் பிளிட்ஸ் 2025 போட்டியில், பிளிட்ஸ்…
சென்னை: தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவதற்காக விண்ணப்பங்கள் ஜூலை…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் உத்திகளை வகுக்க, திமுக, அதிமுக,…
நியூயார்க் : உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகியுமான எலான் மஸ்க், ‘தி அமெரிக்க…