#BREAKING: செப்டம்பர் 21 முதல் பள்ளிகள் திறக்க அனுமதி..!

செப்டம்பர் 21 -ம் தேதி முதல் பள்ளிகளை திறக்கலாம் மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ள நிலையில், தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், 4 கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான வழி காட்டு நெறிமுறைகள் மத்திய அரசு வெளியிட்டுள்ளது .
அதில், செப்டம்பர் 21 -ம் தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பள்ளிக்கு சென்று ஆசிரியரிடம் ஆலோசனை பெறலாம். மேலும், 6 அடி தனிமனித இடைவெளியை மாணவர்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. கைகளை அடிக்கடி கழுவுதல், முக கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்கு வர அனுமதியில்லை, பெற்றோரின் ஒப்புதல் பெற்ற பிறகு மாணவர்கள் பள்ளிக்கு வந்து ஆசிரியரிடம் ஆலோசனை பெற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025