புதுச்சேரியில் பாஜக எம்.பியாக செல்வகணபதி போட்டியின்றி தேர்வாகிறார்.
புதுச்சேரி மாநிலங்களவை இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில்,புதுச்சேரி மாநிலங்களவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் செல்வகணபதி வேட்பு மனு தாக்கல் செய்தார். முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் தேர்தல் நடத்தும் அதிகாரியான முனுசாமியிடம் செல்வகணபதி இன்று மனு தாக்கல் செய்தார்.
மேலும்,அங்கீகாரம் இல்லாத 3 சுயேட்சை வேட்பாளர்கள் மட்டுமே வேட்பமனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில்,புதுச்சேரியில் பாஜக மாநிலங்களவை உறுப்பினராக செல்வகணபதி போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார்.கடைசி நாளான இன்று பிற அரசியல் கட்சியினர் யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யாததால் செல்வகணபதி போட்டியின்றி தேர்வாகிறார்.புதுச்சேரியில் பாஜக சார்பில் ஒருவர் எம்.பி ஆவது இதுவே முதல்முறை ஆகும்.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…