fileimage
கடந்த 3ம் தேதி இரவு 11.32 மணியளவில், நேபாளத்தில் 6.4 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. காத்மண்டு பகுதியில் இருந்து மேற்கே 500 கி.மீ தொலைவில் உள்ள ஜாஜர்கோட் மாவட்டத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், லாமிடாண்டா பகுதியில் 10 கிமீ ஆழத்தில் மையம் கொண்டது.
இந்த நிலநடுக்கத்தினால் ஜாஜர்கோட், ருகும் மாவட்டத்தில் கட்டிடங்கள், வீடுகள் இடிந்து விழுந்து சுக்குநூறாகின. இடிபாடுகளில் சிக்கி 140க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதோடு சுமார் 15 நிமிடங்கள் வரை ஏற்பட்ட நிலநடுக்கத்தினால், இந்தியாவில் டெல்லி, பீகார் போன்ற மாநிலங்களிலும் அதிர்வுகள் உணரப்பட்டது.
இந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு வாராமல் இருக்கும் நேபாளத்தை, தற்போது மீண்டும் ஒரு நிலநடுக்கம் தாக்கியுள்ளது. அதன்படி, நேபாளத்தில் 5.6 ரிக்டர் அளவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மதியம் 4:16 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 10 கி.மீ ஆழத்தில் தாக்கியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.
முன்பு ஏற்பட்ட நடுக்கங்களை போலவே, இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட அதிர்வும் இந்தியாவில் டெல்லி, உத்திர பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட வட மாநில பகுதியிலும் உணரப்பட்டுள்ளது. கடந்த நான்கு நாட்களில் நேபாளத்தில் ஏற்பட்ட மூன்றாவது நிலநடுக்கம் இதுவாகும்.
முன்னதாக இந்திய டெக்டோனிக் தட்டு வடக்கு நோக்கி நகர்ந்து யூரேசிய தட்டுடன் மோதுவதால், இமயமலைக்கு அடியில் அழுத்தம் அதிகரிப்பதாகவும், இதனால் இமயமலைப் பகுதியை எப்போது வேண்டுமானாலும் பெரும் பூகம்பம் தாக்கும் என்று பல விஞ்ஞானிகள் தெரிவித்திருந்த நிலையில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி : இந்திய கிரிக்கெட்டின் மிகப் பெரிய நட்சத்திரங்களான ரோஹித் ஷர்மாவும், விராட் கோலியும் 2025 மே மாதத்தில் டெஸ்ட்…
யூடியூப் உலகம் முழுக்க 200 கோடிக்கும் மேற்பட்ட மக்களால் பயன்படுத்தப்படும் ஒரு பிரம்மாண்ட மேடையாக இருந்து வருகிறது. இதில் பலர்…
சென்னை : நடிகை தன்யா ரவிச்சந்திரனுக்கும், ‘பென்ஸ்’ திரைப்பட ஒளிப்பதிவாளர் கௌதம் ஜார்ஜுக்கும் திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நடைபெற்றது. ஜூலை…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது. இந்த…
டெல்லி : கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா, யேமனில் 2017-ம் ஆண்டு தலால் அப்தோ மஹ்தி என்பவரைக் கொலை…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூலை 16 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும்…