பல்கேரியாவில் உள்ள பிரதமர் முகமூடி அணியாமல் வெளியே சென்றதால் அபராதம் விதித்ததாக மோடி தனது உரையில் மேற்கோள் காட்டி விதிகளை பின்பற்றுமாறு கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் பரவி கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நேற்று பிரதமர் மோடி கொரோனா வைரஸை கட்டுப்படுத்த நாட்டின் முயற்சிகள் குறித்து உரையாற்றியிருந்தார். அந்த உரையின் போது பல்கேரியா பிரதமரான பாய்கோ போரிசோவ் முகமூடி அணியாமல் ரிலா மடாலயத்தில் சுற்று பயணம் செய்ததை அடுத்து அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டதை கூறினார். கடந்த ஜூன் 23 அன்று பல்கேரியா பிரதமர் முகமூடி இன்றி மடத்திற்கு சென்றுள்ளார்.
இதனை பேஸ்புக்கில் வெளியிடப்பட்ட தொலைக்காட்சி காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் வாயிலாக பார்த்த சுகாதார அமைச்சகம் போரிசோவ், அவரது உறுப்பினர்கள் மற்றும் முகமூடி அணியாத பத்திரிக்கையாளர்கள் ஆகியோருக்கு 300 லெவாக்கள் அதாவது 150 யூரோக்கள், 170 டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது.
ஏனெனில், பல்கேரியாவில் மூடப்பட்ட பகுதிகளில் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…
டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…