எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் கழுதையை கட்டி ஊர்வலமாக இழுத்துச் சென்று நபர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் தற்போது இந்தியாவில் பலருக்கும் மின்சார வாகனத்தின் மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வண்ணமாக நிறுவனங்கள் மின்சார வாகன தயாரிப்பில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.
கடந்த சில காலங்களாக எலக்ட்ரிக் மின்சார வாகனங்களில் தீ விபத்து, பழுது என நாளுக்கு நாள் மின்சார வாகனங்களின் மீதான குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் சச்சின் கிட்டே என்பவர் ஓலா மின்சாரக் இருசக்கர வாகனத்தை வாங்கியுள்ளார். இந்த மின்சார வாகனம் வாங்கிய ஆறே நாட்களில் அடிக்கடி பழுது ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து இது தொடர்பாக நிறுவனத்திடம் கேட்டபோது முறையாக பதில் எதையும் எதுவும் கிடைக்காத நிலையில் விரக்தி அடைந்தார்.
இதனையடுத்து, அவர் வாங்கிய ஸ்கூட்டரில் கழுதையை கட்டி ஊர்வலமாக இழுத்துச் சென்று கழுதை மற்றும் வாகனத்தின் முகப்பில் ஒரு அட்டையை தொங்க விட்டிருந்தார். அதில் ஓலா நிறுவனத்திடம் ஜாக்கிரதையாக இருங்கள் வாகனத்தை யாரும் நம்பி வாங்காதீர்கள் என்று எழுதப்பட்டிருந்தது. இதுகுறித்து அவர் கூறுகையில் ஆசை ஆசையாய் வாங்கிய வாகனம் ஆறு நாட்களே ஆன நிலையில் பல முறை பழுது ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஓலா சர்வீஸ் சென்டர் செய்த சோதனையும் சரியாக இல்லாததால், அதிருப்தியில் உள்ளதாக கூறியுள்ளார்.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…