டெல்லிக்கு 490 மெட்ரிக் டன் ஆக்சிஜனை உடனடியாக வழங்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரம் காரணமாக பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா நோயாளிகள் அதிகரித்து வருவதால் ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்து, படுக்கைகள் என தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதில் குறிப்பாக தலைநகர் டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது.
அந்தவகையில் டெல்லி பத்ரா மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாததால் 8 கொரோனா நோயாளிகள் பேர் உயிரிழந்துள்ளதாக அம்மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. மேலும் கடந்த வாரம் ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 25 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது எனபது குறிப்பிடப்படுகிறது.
இந்த நிலையில், தலைக்கு மேல் வெள்ளம் போன்ற சூழல் உள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் டெல்லி பத்ரா மருத்துவமனையில் 8 பேர் இறந்த பின்னரும் கண்ணை மூடிக்கொண்டு இருக்க முடியாது. டெல்லிக்கு 490 மெட்ரிக் டன் ஆக்சிஜனை உடனடியாக வழங்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆக்சிஜன் வழங்கவில்லை என்றால் நீதிமன்ற நடவடிக்கை பாயும் எனவும் மத்திய அரசுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…