தெலுங்கானா மாநிலத்தில் கார் ஒன்று விவசாய கிணற்றில் எதிர்பாராத விதமாக விழுந்ததில், காரில் பயணித்த 5 பேர் பரிதமாக உயிரிழந்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலத்தின் கரீம் நகர் பகுதியில் உள்ள விவசாய கிணறு ஒன்றில் உஸ்னாபாத் நோக்கி சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராதவிதமாக அந்த கிணற்றில் விழுந்துள்ளது. இதனையடுத்து காரில் இருந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்ப்பதற்குள் கார் முழுவதும் கிணற்றுக்குள் மூழ்கியுள்ளது. எனவே, இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு படையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து மீட்பு பணியில் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். சுமார் 5 மணி நேர போராட்டத்துக்கு பின் கிணற்றுக்குள் விழுந்த கார் மீட்கப்பட்ட து. ஆனால், காரில் பயணித்தவர்கள் ஒருவரும் காரில் இல்லாததால் கிணற்றுக்குள் மேலும் தேடுதல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இதுவரை மூன்று பேர் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், இவர்களின் உடல் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. மேலும் காரில் இருந்த இருவரின் சடலங்களை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…