CBSE +2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா..? நாளை விசாரணை..!

Published by
murugan

சிபிஎஸ்சி பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா என்பது குறித்து நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணை.

கொரோனா காரணமாக CBSE 10-ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து எனவும்  CBSE 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ஒத்திவைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. மேலும், ஜூன் 1 ஆம் தேதி கொரோனா தொற்றின் நிலை குறித்து மதிப்பாய்வு செய்யப்பட்டு பின்னர் பொதுத் தேர்வுகளின் தேதிகள் அறிவிக்கப்படும் என அறிவித்தனர்.

இந்நிலையில், வழக்கறிஞர் மம்தா சர்மா 12 வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், கொரோனா காரணமாக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டால் முடிவு  தாமதமாகும். மேலும், கொரோனா தொற்று காரணமாக லட்சக்கணக்கான மாணவர்களின்  பாதுகாப்பை கருத்தில் கொண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட வேண்டும் என தெரிவித்தார்.

இந்த மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்வை ரத்து செய்வது தொடர்பான நோட்டீசை சிபிஎஸ்இ-க்கு அனுப்ப தவறிவிட்டதால் வழக்கை ஒத்திவைப்பதாகவும், சிபிஎஸ்இ-க்கு அனுப்ப மனுதாரருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும், ஜூன் 1 ம் தேதி 12 வகுப்பு பொதுத் தேர்வுகள் குறித்து அரசு இறுதி முடிவு எடுக்க உள்ளதாக அரசு முடிவு உங்களுக்கு சாதகமாக இருக்க வாய்ப்புள்ளது என நீதிபதிகள் மனுதாரரிடம் தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ளது. சிபிஎஸ்சி பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா..? என்பது குறித்து நாளை தெரியவரும்.

Published by
murugan

Recent Posts

அன்புமணி நீக்கம்: தலைமை தேர்தல் ஆணையத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம்!

அன்புமணி நீக்கம்: தலைமை தேர்தல் ஆணையத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம்!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸை கட்சியின் தலைவர் பதவியில்…

27 minutes ago

லாரியும் ஈச்சர் வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த சோகம்.!

விருதுநகர் : அருப்புக்கோட்டையில் மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச் சாலையில் ஜூலை 10, 2025 அன்று நிகழ்ந்த கோர…

1 hour ago

நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா புழல் சிறையில் இருந்து விடுவிப்பு.!

சென்னை : நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, போதைப்பொருள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் மத்திய சிறையில்…

1 hour ago

பிரதமர் மோடிக்கு உயரிய விருது அளித்து கவுரவித்த நமீபியா அரசு..!!

நமீபியா : பிரதமர் நரேந்திர மோடி 5 நாடுகள் பயணத்தின் இறுதி கட்டமாக, நேற்றைய தினம் நமீபியா சென்று சேர்ந்துள்ளார்.…

2 hours ago

”ரயில்வே கிராஸிங்கில் சிசிடிவி கட்டாயம்” – வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது ரயில்வே துறை.!

கடலூர் : செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய கோர விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தது தமிழகத்தையே சோகத்தில்…

2 hours ago

இந்தியா – இங்கிலாந்து இடையே 3வது டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்.!

லண்டன் : ஷுப்மான் கில் மற்றும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கு இடையிலான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட…

2 hours ago