இந்தியாவில் கொரோனாவால் இதுவரை 979 பேர் பாதிக்கப்பட்டு, 25 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு உத்தரவை மீறி வருபவர்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என அரசு எச்சரித்துள்ளது.
இந்நிலையில், மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் தடுக்கும் நடவடிக்கையில் தீவிரம் காட்ட வேண்டும் என்றும் விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களை காலி செய்ய வற்புறுத்த கூடாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தங்கும் விடுதிகள் நடத்தும் விடுதிகளை எச்சரிக்க வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டும். இதையடுத்து இடம் பெயர்ந்து பணி புரியும் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுத்து நிறுவனங்கள் பாதுகாக்க வேண்டும் என்றும் தடையை மீறி வெளியே சுற்றுபவர்களை அரசு மருத்துவமனையில் 14 நாள் கண்காணிப்பில் வைக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதனிடையே இந்தியா முழுவதும் ஊடரங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் பிரதமர் மோடி அவர்கள் இன்று ‘மன் கி பாத்’ என்ற மனதின் குரல் என்னும் நிகழ்ச்சியில் வானொலி மூலமாக உரையாற்றினார். அப்போது கொரோனாவுக்கு எதிரான இந்த யுத்தத்தில் நமக்கு இத்தகைய கடுமையான நடவடிக்கைகள் தேவை என்றும் வீட்டில் முடங்கி கிடக்கும் சிரமம் எனக்கு புரிகிறது, இந்த சூழலில் வேறு வழியில்லை என மோடி தெரிவித்துள்ளார். லாக்டவுன் என்பது கடுமையான முடிவாக இருந்தாலும் நமக்கு வேறு வழியே இல்லாமல் இருக்கிறது. நாட்டு மக்கள் அனைவரும் லாக்டவுனை பின்பற்ற வேண்டும் என மோடி வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…