சென்னை சென்ட்ரல் – பத்ரக் சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடக்கம்..!

சென்னை சென்ட்ரல் – பத்ரக் சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.
ஒடிசாவில் பஹானாகா பஜார் ரயில் நிலையம் அருகே நேற்று இரவு 7 மணியளவில் ஷாலிமார்-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்கள் ஒன்றின் மீது ஒன்று மோதி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் இதுவரை 238 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 900-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்ததாகவும் ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், தற்போது வரை 48 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 39 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதாகவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களின் நலனுக்காக சென்னையில் இருந்து ஒடிசா வரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. தற்பொழுது, சென்னை சென்ட்ரல் பத்ரக் சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
Bookings for Train No. 02840 Dr MGR Chennai Central – Bhadrak Special Train is open
— Southern Railway (@GMSRailway) June 3, 2023