ஒடிசா ரயில் விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இரங்கல்.!

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சரக்கு ரயில் என மூன்று ரயில்களும் விபத்தில் சிக்கின. இந்த விபத்தில் 238 பேர் உயிரிழந்ததாகதகவல்கள் வெளியாகியுள்ளன. 900க்கும் அதிகமானோர் மீட்கப்பட்டு அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த கோர விபத்தில் 30க்கும் மேற்பட்ட தமிழகத்தை சேர்ந்தவர்கள் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் உட்பட பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
தற்போது, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, தனது இரங்கலை அறிக்கை வாயிலாக தெரிவித்து உள்ளார். அதில், உயிரிழந்தோர் குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும், சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைய பிராத்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த ரயில் விபத்தில் சிக்கியவர்களில் புதுச்சேரியை செத்தவர்கள் இருந்தால் , அவர்களை மீட்கும் பணிகளை புதுச்சேரி அரசு மேற்கொள்ளும் எனவும், அவர்களுக்கு தேவையான உதவியை அரசு செயல்படுத்தும் எனவும் குறிப்பிட்டு, உதவி எண்களையும் அந்த அறிக்கையில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி குறிப்பிட்டுள்ளார்.
கட்டமில்லா தொலைபேசி எண்கள் – 1070, 1077, 112
தொலைபேசி எண்கள் – 0413-2251003 , 2255996