டெல்லி: மக்களவைத் தேர்தல் முடிவுகள் நாளை (ஜூன் 4) வெளியாக உள்ள நிலையில், இன்று இந்திய தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ்குமார் செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்த்தினார். அதில், தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பான பல்வேறு சந்தேகங்களுக்கான விளக்கங்களை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது குறித்து விளக்கம் அளித்தார். காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெயராம் ரமேஷ் கூறிய குற்றச்சாட்டுக்கு எதிராகவும் ராஜீவ் குமார் கருத்து தெரிவித்திருந்தார்.
முன்னதாக, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெயராம் ரமேஷ் தனது சமூக வலைத்தளம் வாயிலாக விமர்சனம் செய்கையில், மத்திய அமைச்சர் அமித்ஷா, 150 மாவட்ட ஆட்சியர்களிடம் ஆலோசனை நடத்தி தேர்தல் விதிமுறைகளை மீறுகிறார் என ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதனை முற்றிலும் மறுத்த தேர்தல் ஆணையர், இது சரியல்ல. ஒரு வதந்தியை பரப்பி அனைவரையும் சந்தேகிக்க வைக்கின்றனர். அவர்கள் குற்றம் சாட்டிய அனைவரும் மாவட்ட ஆட்சியர்கள். அப்படி என்றால் அவர்கள் அனைவரும் அந்தந்த மாவட்ட தேர்தல் தலைமை அதிகாரிகள். ஒரு மாவட்ட தேர்தல் அதிகாரியை வேட்பாளராக இருக்கும் ஒருவர் அதிகாரம் செலுத்த முடியுமா? அப்படி யார் செய்தது என்பதை நீங்கள் வெளிப்படையாக சொல்லுங்கள். அதற்கு நாங்கள் தக்க நடவடிக்கை எடுப்போம் என்று தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் கூறினார்.
லக்னோ : மே 19, 2025 அன்று லக்னோவில் நடந்த ஐபிஎல் 2025 போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) மற்றும் லக்னோ…
சென்னை : மே 16 முதல் 19, 2025 வரை தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தர்மபுரி, மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இடி…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. …
லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை…
டெல்லி : கொரோனா வைரஸ் தொற்று உலகளவில் 2020 முதல் பரவி கொண்டு பெரும் அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டு வருகிறது. இதனால்…