#BREAKING: முதல்வர் மம்தா சசோதரர் கொரோனாவால் காலமானார்..!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் சகோதரர் ஆஷிம் பானர்ஜி காலமானார்.
ஆஷிம் பானர்ஜி கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு ஒரு மாதமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று காலை 9:20 மணிக்கு சிகிக்சை பலனின்றி அவர் இறந்தார்.
முதல்வரின் உறவினர் நெருங்கிய வட்டம் கூறுகையில், கொரோனா நெறிமுறைக்கு இணங்க அவரது இறுதி சடங்குகள் இன்று பிற்பகல் நிமத்லா மகாஸ்மாஷனில் செய்யப்படும் என்று குடும்பத்தின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வரும் அவரது சகோதரரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
மேற்கு வங்களத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 20,748 பேர் புதிதாக கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனுடன்,உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், மாநிலத்தில் 138 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். இதன் மூலம், வங்காளத்தில் தொடர்ச்சியாக பத்து நாட்களுக்கு 100-க்கும் மேற்பட்ட உயிரிழந்து நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025