கிழக்கு அகர்தலாவில் பாஜக-கம்யூனிஸ்ட் இடையே நடைபெற்ற மோதலில் மூன்று பத்திரிகையாளர்கள் உட்பட 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
திரிபுரா மாநிலம், கிழக்கு அகர்தலாவில் உள்ள கயர்பூர் பகுதியில் பாஜக-கம்யூனிஸ்ட் கட்சியினர் இடையே கடும் மோதல் நடைபெற்றது. ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி தாக்குதலில் ஈடுபட்டனர். மதியம் தொடங்கிய இந்த மோதல், நள்ளிரவு வரை நடைபெற்றதாகவும், இந்த மோதலில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
கிழக்கு அகர்தலாவில் நடந்த இந்த தாக்குதல் நள்ளிரவு வரை தொடர்ந்ததாகவும், இதில் செய்திகளை சேகரிக்க சென்ற 3 பத்திரிகையாளர்கள் உட்பட 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், 10 வீடுகள், சில மோட்டார் சைக்கிள்கள் தீயிட்டு கொளுத்தப்பட்தாக கூறப்பட்டுள்ளது. பின்னர், கூடுதல் படைகளை அமர்த்திய பின் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்று போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கு தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இருப்பினும் போலீசார், தங்களின் விசாரணையைத் தொடங்கினர்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…