மேற்கு வங்கத்தில் பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. 4 கட்டங்களாக 135 தொகுதிகளுக்கு தேர்தல் நடை பெற்றுள்ளது. மீதமுள்ள 159 தொகுதிகளுக்கு 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், இன்று மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தலின் 5-ம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. 6 மாவட்டங்களில் உள்ள 45 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், பர்கானாஸ் மாவட்டத்தில் பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர். இந்த சம்பவம் ஏற்பட்டபோது பிஜேநகர் பாஜக வேட்பாளர் சிவசச்சி தத்தாவும் அந்த இடத்தில் இருந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தத்தா, திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் வாக்கு சாவடியை தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர முயன்றனர்.
அதை செய்ய முடியததால் அவர்கள் வன்முறையை உருவாக்கினார் என்றார். மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தல் மொத்தம் 8 கட்டங்களாக நடைபெறும். தற்போது 5 வது கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட ஒவ்வொரு கட்டத்திலும் மோதல் ஏற்பட்டுள்ளது. பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களிடையே மோதல் ஏற்படுவது வழக்கமாக நடைபெற்று வருகிறது.
சென்னை : கீழ்ப்பாக்கத்தில் ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.…
கர்நாடகா : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி இன்று காலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும்…
சென்னை : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, வயது மூப்பு காரணமாக இன்று (ஜூலை 14) பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில்…
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கவுள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம், மக்களின் குறைகளை விரைவாகத் தீர்க்கும் நோக்கில்…
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…