RahulGandhi - Kovai [File Image]
டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தமிழகம் வந்தடைந்தார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, நீண்ட நீதி போராட்டத்திற்கு பிறகு மீண்டும் கேரள, மாநில வயநாடு தொகுதி எம்பியாக தனது பொறுப்பை மீட்டுள்ளார். இந்த நீதி போராட்டத்திற்கு பிறகு முதன் முறையாக தனது சொந்த தொகுதிக்கு ராகுல்காந்தி செல்ல உள்ளார்.
அவர் டெல்லியில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் இன்று தமிழகம் வந்தடைந்தார். கோவையில் இருந்து சாலைமார்க்கமாக நீலகிரி மாவட்டம் உதகை செல்கிறார். அங்கு, முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஜெய்ராம் ரமேஷை சந்திக்க உள்ளார். பின்னர் ஊட்டியில் நடைபெறும் சில நிகழ்வுகளில் கலந்துகொள்கிறார்.
பின்னர், தோடர் பழங்குடியின மக்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடுகிறார். அதன் பின், அங்கிருந்து மாலை கூடலூர் வழியாக தனது சொந்த தொகுதியான கேரள மாநிலம், வயநாடு செல்கிறார். இவரை வரவேற்க தமிழகம் மற்றும் கேரளாவில் கட்சி தொண்டர்கள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். மேலும் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
லக்னோ : ஐபிஎல் 2025 இன் 61வது போட்டி இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு…
டெல்லி : கொரோனா தொற்று மீண்டும் உலகம் முழுவதும், குறிப்பாக, தென்கிழக்காசியாவில் வேகமாக பரவுகிறது. கொரோனா வைரஸின் ஒமைக்ரான் வேரியன்ட்களில்…
லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோ…
சென்னை : யோகி டா பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், விஷால் - சாய் தன்ஷிகா…
சென்னை : நடிகர் விஷால் நடிகை சாய் தன்ஷிகாவை ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. விஷாலும்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு திங்களன்று நடந்த இந்தியா-பாகிஸ்தான் இராணுவ மோதல் குறித்து வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி…