பிரதமரின் நிவாரண நிதி அமைப்பான பிஎம் கேர்ஸ் குறித்து பல்வேறு குற்றசாட்டுகளை காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி பிஎம் கேர்ஸ் பற்றி பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்தார். அவர் கூறுகையில், பிரதமரின் நிவாரண நிதி திட்டத்தின் கீழ் 5000 கோடி ரூபாய் நன்கொடையாக பெற்றுள்ள இந்த நிதி மேலாண்மைக்கு வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்றும், அதற்கு அதிக பொறுப்புகள் இருக்க வேண்டும் எனவும் அபிஷேக் சிங்வி கூறினார். நாட்டின் உயர்மட்டத்தில் இருக்கும் பிரதமர் அலுவலகமானது எந்தவித சட்ட அனுமதியும் இன்றி பணத்தை வசூல் செய்வதாக அவர் குற்றம் சாட்டினார்.
மேலும், பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து கிட்டத்தட்ட 60 சதவீத நிதியை பிரதமரின் நிவாரண நிதிக்காக பெற்றுள்ளதாகவும், இந்த நிதி வசூலானது அரசியலமைப்பு சட்ட விதிமுறைகளை மீறி உள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
எந்த ஒரு சட்ட அனுமதியும் இல்லாமல் மாநில அரசுகளானது மிகப்பெரிய தொகையை நிவாரணமாக திரட்ட முடியாது. ஆனால் இங்கே மத்திய அரசு எந்தவித சட்ட அனுமதியும் இல்லாமல் 5000 கோடி ரூபாயை நிவாரணமாக பெற்றுள்ளது. இதற்கு யார் பொறுப்பாகும்? இதனை யார் கண்காணிப்பு செய்வார்கள்? என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை பிரதமரின் நிவாரண நிதி தொடர்பாக காங்கிரஸ் முக்கிய தலைவர் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி முன்வைத்தார்.
பிரதமரின் நிவாரண நிதி அமைப்பின் இந்த வெளிப்படுத்தன்மையற்ற கொள்கையானது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்றும், குற்றம் சாட்டிய அபிஷேக், இந்த நிதி திரட்டலில் முழுதாக ரகசியம் மறைக்கப்பட்டுள்ளது என்றும், இதில் யார் யார் நன்கொடை கொடுத்தார்கள் என்ற விவரம் வெளிப்படையாக தெரியவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். இதனை உரிய ஆய்வு செய்ய வேண்டும் என்றும், இதனை அரசு அதிகாரிகள் தணிக்கை செய்ய வேண்டும் என்றும் அபிஷேக் சிங்வி வலியுறுத்தினார்.
பிஎம் கேர்ஸ் நிதி மேலாண்மை தொடர்பாக கடந்த ஆறு வருடங்கள் ஆகியும் வெள்ளை அறிக்கையை பிரதமர் அலுவலகம் வெளியிடாது ஏன்? பணம் எங்கே செலவிடப்படுகிறது என்றும் பல்வேறு குற்றசாட்டுகளை பிரகாஷ் சிங்வி முன்வைத்தார்.
சிட்னி : ஆஸ்திரேலிய அரசு, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், டிக்டாக், மற்றும் எக்ஸ் ஆகிய சமூக வலைதளங்களைப்…
சென்னை : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி மிகப்பெரிய…
சென்னை : தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) வெளியேறியது குறித்து தமிழக…
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 01-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்…
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்…
சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம்…