தெலுங்கான மந்திரி மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நடுத்தர மக்கள் மட்டுமின்றி அரசியல் பிரமுகர்களும், பல பிரபலங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று, சிலர் மீண்டும் வந்துள்ளனர். அந்த வகையில் தெலுங்கானாவில் தொழில்துறை மந்திரியாக இருந்து வருபவர் மல்லா ரெட்டி. கடந்த வாரம் இவருக்கும், இவரது மனைவிக்கும் கொரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் தற்போது மந்திரி மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனையடுத்து மருத்துவர்களின் பரிந்துரையின் படி மல்லா ரெட்டி தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை எடுத்து வருகிறார். இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது, தனக்கு நோய் தொற்றுக்கான எந்த அறிகுறிகளும் இல்லாமலே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த சூழலில் அனைவரும் தைரியமாக இருக்க வேண்டும், யாரும் கவலைப்பட கூடாது என்று கூறியுள்ளார்.
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…