மும்பையில் உள்ள கொரோனா பராமரிப்பு மையத்தில் பணியாற்றி வந்த செவிலியரை கொரோனா நோயாளி ஒருவர் கத்தியால் தாக்கியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவி வரும் நிலையில் பல்வேறு இடங்களில் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் இல்லாமலும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாகவும் நோயாளிகள் மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்படுவது குறைவாக இருக்கிறது. ஆனால் பல இடங்களில் அரசு ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளை பராமரிப்பு மையங்கள் ஆக மாற்றி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறது. இவ்வாறு அரசு கடினமான சூழ்நிலையிலும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் நிலையில் முன்கள பணியாளர்களாக பணியாற்றக்கூடிய செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் மிக மதிக்கப்பட கூடியவர்களாக தான் பார்க்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் மும்பையில் உள்ள ஒரு கொரோனா பராமரிப்பு மையத்தில் 45 வயதுடைய கொரோனா நோயாளி ஒருவர் அந்த பராமரிப்பு மையத்தில் பணியாற்றி வந்த செவிலியரை கத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பதாக இந்த சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிக்கு சரியாக சிகிச்சை கொடுக்கவில்லை என்பதால் தான் இந்த தகராறு நடந்ததாக கூறப்படுகிறது. மேலும், செவிலியரை தாக்கிய நோயாளி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…