மகாராஷ்டிராவில் 50,231 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 1,635 பேர் பலியாகியுள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. சில நாடுகளில் இதன் தாக்கம் அதிகரித்து வீரியம் சற்று குறைய ஆரம்பித்துள்ளது. இருப்பினும், இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டேதான் போகிறது. இதுவரை 138,536 பேர் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 4,024 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் இந்தியாவில் கொரோனாவால் 7,113 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 156 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 57,692 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். தற்போது, 76,820 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் நாட்டிலேயே மஹாராஷ்டிராவில் தான் பாதிப்பு அதிகம். மும்பை, புனே போன்ற முக்கிய நகரங்களை கொண்டுள்ள மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து தற்போது 50 ஆயிரத்தை தண்டியுள்ளது. மகாராஷ்டிராவில் 50,231 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 1,635 பேர் பலியாகியுள்ளார். குணமடைந்தோர் எண்ணிக்கை 14,600 ஆக உள்ளது.
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…