இன்று மதியம் சுமர் 180 கிலோ மீட்டர் வேகத்தில் ஆம்பன் புயல் கரையை கடக்கும் ஆம்பன் புயல்.
இந்தியா கொரோனா எனும் பெரும் அரக்கனை சந்திட்து வரும் நிலையில் புதிதாக ஆம்பன் புயல் உருவாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த ஆம்பன் புயல் கரையை நெருங்கி வரும் நிலையில், இந்தியா இரு மாபெரும் சவாலை எதிர்கொண்டு வருவதாக தேசிய பேரிடர் மீட்பு படையின் தலைவர் எஸ்.என்.பிரதான் தெரிவித்துள்ளார். மேலும் கூறிய அவர், கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக வலுவான புயலாக ஆம்பன் புயல் தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகி மேற்கு வங்கத்தை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. இந்த புயல் இன்று மதியம் மேற்கு வங்கத்தில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் கடும் பாதிப்பு ஏற்படக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீடபு படையின் 41 குழுக்கள் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவுக்கு விரைந்துள்ளன. மேலும், அதன் தலைவர் எஸ்.என். பிரதான் அளித்துள்ள பேட்டியில், ஏற்கனவே கொரோனா பாதிப்பு மேற்கு வங்கத்தில் கடுமையாக இருக்கும் சூழலில் ஆம்பன் புயல் முன்னெச்சரிக்கையாக கடலோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம். முதன் முறையாக கொரோனா மற்றும் ஆம்பன் புயல் என இரு பெரும் சவால்களை நாம் எதிர்கொள்கிறோம். இந்த புயல் இன்று மதியம் சுமர் 180 கிலோ மீட்டர் வேகத்தில் ஆம்பன் புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…