சிலிண்டர் வெடித்து விபத்து – 3 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழப்பு!

Published by
Rebekal

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள திக்ரி எனும் கிராமத்தில் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளாகியதில் மூன்று குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள திக்ரி எனும் கிராமத்தில் வசித்து வரக்கூடிய நூருல் ஹசன் என்பவரது வீட்டில் உள்ள எல்பிஜி சிலிண்டர் நேற்று இரவு 10 மணியளவில் வெடித்துள்ளது. இந்த சிலிண்டர் வெடித்ததில் அவர் வசித்து வந்த இரட்டை அடுக்கு மாடி குடியிருப்பு இடிந்து விழுந்துள்ளது.இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 7 பேர் படுகாயம் அடைந்துள்ள நிலையில், அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் மூன்று பேர் குழந்தைகள் எனவும் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறை கண்காணிப்பாளர் சந்தோஷ் குமார் அவர்கள் தெரிவிக்கையில், சம்பவம் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டதாகவும், தடவியல் குழுக்கள் மாதிரிகளை சேகரித்து வருவதாகவும் இந்த சம்பவம் குறித்து தற்போது விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும்  தெரிவித்துள்ளார்.

மேலும் உயிரிழந்த 8 பேரின் உத்தரபிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளதுடன், காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்பவும், அவர்களுக்கு நல்ல சிகிச்சை அளிக்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் சம்பவம் நடந்த இடத்தில் விசாரணை நடத்தி சிலிண்டர் வெடித்ததற்கான காரணம் குறித்து அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்குமாறும் மாவட்ட நீதிபதி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

4 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

6 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

9 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

10 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

12 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

13 hours ago