பாலம் இடிந்த விபத்தில் உயிரிழப்பு 9ஆக உயர்வு.., பிரதமர் மோடி நிவரணம் அறிவிப்பு.!

உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.

pm modi - Gambhira bridge collapse

குஜராத் : குஜராத்தில் பாலம் இடிந்து வாகனங்கள் ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 9ஆக உயர்ந்துள்ளது. 6 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வதோதராவையும் ஆனந்தையும் இணைக்கும் காம்பிரா பாலத்தின் ஒரு பெரிய பகுதி இடிந்து விழுந்ததில் குறைந்தது ஐந்து வாகனங்கள் ஆற்றில் விழுந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் நிவாரண நிதியாக அறிவித்தார்.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி, ”காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிய பிரதமர் மோடி, உயிர் இழப்புக்கு இரங்கல் தெரிவித்து, “குஜராத்தின் வதோதரா மாவட்டத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட உயிர் இழப்பு மிகவும் வருத்தமளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

900 மீட்டர் நீளமுள்ள இந்த கம்பீரா பாலம் வதோதரா மற்றும் ஆனந்த் மாவட்டங்களை இணைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாலம் 1985 ஆம் ஆண்டு கட்டப்பட்டது என்றும், அதன் பழுது மற்றும் பராமரிப்பு பணிகள் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குஜராத் சுகாதார அமைச்சர் ரிஷிகேஷ் படேல் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்